Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு ….? பெங்களூர் VS பஞ்சாப் இன்று மோதல் ….!!!

14-வது சீசன் ஐபில் தொடரில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14 வது சீசன் ஐபிஎல் தொடர்  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில்  நடப்பு சீசனில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மற்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்,கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 7 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேபோல் 12 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில்  பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேசமயம் ப்ளே ஆப்  வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி கடுமையாக போராடும்  என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .இந்திய நேரப்படி இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் தொடங்குகிறது .

Categories

Tech |