Categories
உலக செய்திகள்

அமெரிக்க மக்களுக்கு குட் நியூஸ்… வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா தினசரி பாதிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 320-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 754-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறிதளவு மாற்றம் தென்படுவதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனைகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில் 93 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 75 ஆயிரமாக சரிந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த இரண்டரை வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தற்போது மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் புதிதாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் இறப்பு விகிதம் ஒரு வாரத்திற்கு முன்பு 2000-ஆக இருந்த நிலையில் தற்போது 1900-ஆக மாற்றமடைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையும் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாத்திரை தற்போது சோதனை ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம் அங்கீகாரம் வழங்கிவிட்டால் இந்த மாத்திரை கொரோனாவுக்கான முதல் மாத்திரை என்ற பெயரை பெறும். மேலும் அமெரிக்காவின் மெர்க் நிறுவனத்தார் இந்த மாத்திரையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அமெரிக்க மக்களுக்கு இந்த தகவல்கள் அனைத்தும் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

Categories

Tech |