பிரித்தானியாவில் சிவப்பு பயண பட்டியலில் இருந்து 45 நாடுகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் 54 நாடுகள் இருக்கின்றது. அவற்றில் 9 நாடுகளுக்கு மட்டும் பயண தடை நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மீதமுள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு இனிமேல் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை. இது பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் அடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்க இருப்பதாக சண்டே டெலிகிராப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கண்ட நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் இனி பிரித்தானியாவுக்கு வரும்போது அரசு நியமிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி இருந்தால் அவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி பிரித்தானியாவுக்கு வந்ததும் 2 நாட்களுக்கு பிறகு பி.சி.ஆர். சோதனையும் எடுக்க வேண்டியது இல்லை. ஆகவே அதற்கு பதிலாக மலிவான பக்கவாட்டு ஓட்டத்தை தேர்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது.