எதைப்பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். உங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கிய தேவைக்கு கொஞ்சம் சேமித்து வைப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். இன்று நீங்கள் மன மகிழ்வாக காணப்படுவீர்கள். பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் இன்று இருக்கும். அந்த விஷயத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பு இருக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். இன்று கலகலப்பான தன்மை நிலவும். எது எப்படியாக இருந்தாலும் இந்த தீபஒளி திருநாளில் உங்களுடைய பிரச்சினைகளையும், துன்பங்களையும் தூர தூக்கி போட்டுவிட்டு இன்று தீபாவளியை ரொம்ப மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே முடிந்தால் இன்று சிவப்பு நிறத்தில் ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை :
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்