Categories
மாநில செய்திகள்

4வது மெகா தடுப்பூசி முகாம்…. 2,00,000 பேருக்கு போடணும்…. தமிழக அரசின் இலக்கு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட பணியாக செப்டம்பர் 12ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதில் 20,91,021 பேர் தடுப்புசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் 14, 43, 879 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

அதேபோன்று மூன்றாவது  நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24, 93,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில் 10 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் நான்காவது மாபெரும் மெகா  தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 20,000 தடுப்பூசி முகாம்களில்  20,00,000 கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 1600 சிறப்பு முகாம்கள் தொடங்கி தடுப்பூசி போடும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |