Categories
அரசியல்

அமைச்சரே…! வரலாறு முக்கியம்… எம்.ஜி.ஆர். நம்பிக்கை துரோகியா…? ஜெயக்குமார் கடும் தாக்கு …!!

திமுக தான் துரோக கட்சி, துரோக கும்பல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

எம்.ஜி.ஆரை அமைச்சர் துரைமுருகன் துரோகி என விமர்சித்தது குறித்து கண்டனம் தெரிவித்த முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார்,  இன்றைக்கு உண்மையிலேயே அமைச்சரே வரலாற்றை மாற்றி எழுதப்பட கூடாது. திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் அடையாளம் காட்டியது. அன்றைக்கு அடையாளம் காட்டவில்லை என்றால் இன்றைக்கு துரைமுருகன் வந்து திமுகவில் அமைச்சராக இருக்க முடியாது, இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், அன்றைக்கு டாக்டர் நாவலரா ?  கருணாநிதியா என்று சொல்லும்போது அன்றைக்கு திரு மு. கருணாநிதியை முதல்வராக முன்மொழிந்து அன்றைக்கு முதலமைச்சராக கொண்டுவந்தது புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இதையெல்லாம் நன்றி மறந்து விட்டு, இந்த துரோகத்தை திமுக பண்ணிவிட்ட…  இப்படி ஒரு அப்பட்டமான ஒரு ஆகாசப் புளுகு அண்ட புளுகு துரைமுருகன் சொன்னால் கண்டிப்பாக வரலாறு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது.

அதே நேரத்தில் புரட்சித் தலைவரை பொறுத்தவரையில் ஊர் ஊராகப் போய் அவரே கட்சி சின்னம்… திமுக கொடியையும் சரி,  அந்த சின்னத்தையும் சரி பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். புரட்சி தலைவர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அவரால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது.

பேரறிஞர் அண்ணா ஒரு சமயம் காரில் போய்கொண்டிருக்கும் போது அங்குள்ள விவசாயிகள் எல்லாம் என்ன சொல்றாங்க… காரை நிறுத்திவிட்டுஅண்ணா இறங்குனார்….  இறங்குன உடனே விவசாயிகள் கேட்கிறார்கள்….  நீங்கள் எல்லாரும் எம்.ஜி.ஆர் கட்சியா ? என்று அப்படி வந்து பட்டிதொட்டியெல்லாம் தெரியப்படுத்தினர்.

திமுக என்றாலே எம்ஜிஆர் கட்சி என்ற அளவிற்கு ஒரு அடையாளம் கண்டவர். புரட்சித்தலைவரை பொருத்தவரையில் சினிமாவிலும் சரி பார்த்து இருப்பீர்கள்… நாடோடி மன்னன் படத்தில் முதல் காட்சியே எப்படி வரும் என்று. கொடியைப் பிடித்துக்கொண்டு… இதெல்லாம் துரைமுருகனுக்கு தெரியாதா ? அது அப்படி எல்லாம் கட்சியை வளர்த்து… அவர்கள் பட்ட குடும்ப கடனைக் கூட  அடைத்தார்.

அன்றைக்கு முரசொலி மாறன் எங்கள் குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் என்று  சொல்லி இருக்கிறார் என்று சொன்னால்…. இவ்வளவு தூரம் வந்து புரட்சித் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட நீங்கள்…. புரட்சித்தலைவர் கணக்கு கேட்டார் ஒரு காரணத்திற்காக அவரை நீக்கிவிட்டு, அவரை துரோகி என்று சொன்னால் உண்மையிலேயே உங்கள் கட்சி ஒரு துரோக கும்பல், உங்க கட்சிதான் துரோகத்திற்கு முழு காரணமாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Categories

Tech |