Categories
மாநில செய்திகள்

3000 தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து…. இன்னும் 3 வருடம் தான்…. தமிழகமே மாறிவிடும்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொத்தமங்கலத்தில் நேற்று  காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “ஒருமுறை மட்டும் பயன்படுத்தி பின்னர் தூக்கியெறியப்படும் 14 வகையானபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ அரசு தடை விதித்துள்ளது .

இதனால் தமிழகத்தில் 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது . தமிழகம் மூன்று ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்துவது சுற்று சூழல் மற்றும் உடல் நலத்திற்கும் தீங்குவிளைவிக்கும். எனவே மக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |