மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் திசையன்விளை பகுதியில் வசிக்கும் மன்னர் ராஜா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மன்னர் ராஜாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 11 மது பாட்டில்கள் மற்றும் ரூ.200 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.