Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “நண்பரின் உதவி மகிழ்ச்சியை கொடுக்கும்”… ஆடம்பர பணச் செலவு வேண்டாம்..!!

தனது அபார சிந்தனைத் திறன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மகிழ்ச்சியை கொடுக்கும். பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். ஆடம்பர வகையிலான பணச் செலவை மட்டும் தவிர்த்துவிடுங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்கி விடுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாகவே இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மனம் மகிழ்ச்சியாகவே இருக்கும். எல்லா துறைகளிலும் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.

இன்று நண்பர்கள் மூலம் முக்கிய பிரச்னைக்கு முடிவுகட்டும் நாளாகவும் இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் பேசும் பொழுது கொஞ்சம் அன்பாக பேசுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் கொஞ்சம் வரக்கூடும் என்பதால் அந்த விஷயத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். சரிங்க எது எப்படியாக இருக்கட்டும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி சந்தோசமாக இன்று நீங்கள் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போலவே இன்று மஞ்சள் நிறத்தில் ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |