Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி… விழிப்புணர்வு ஓட்டபந்தயம்… தலைமை தாங்கிய ஆட்சியர்…!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை இந்திய திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஓட்டபந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த ஓட்டபந்தயத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஓட்டபந்தயம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அன்னஞ்சி விலக்கு வரை நடைபெற்றுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்டத்தின் உறுப்பினர்கள் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கழுவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மதுபான கடைகள் இருப்பதால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், மட்காத குப்பைகள் என அதிக அளவில் காணபட்டதால் அவற்றை முழுவதுமாக அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

Categories

Tech |