காந்தி சிலையின் கையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மனு கொடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் காந்தி சிலைக்கு ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில் தனியார் துறைகளிலும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும், மாநில அரசு பணிகளிலும், மத்திய அரசு பணிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேம நல ஓய்வு திட்டத்தின் கீழாக சமமான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழி போராட்டங்கள் மூலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என தொழிளார்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி அவர்களே, உங்களின் பிறந்த நாள் என்பதினால் எங்கள் கோரிக்கையை தங்களிடம் அளித்துள்ளோம். இதனை கனிவுடன் பரிசீலித்து மத்திய அரசையும், சேம நல வாரியத்தையும் வலியுறுத்தி எங்களுக்கு உரிய ஓய்வூதியத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தொழிளார்கள் தெரிவித்துள்ளனர்.