காபூல் நகரின் மலைப்பகுதிகள் நிறைந்த கோடாமன் நகரில், ஆயிரக்கணக்கான ஆண்கள் தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், தங்களின் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பெண்கள் போராடினர். மேலும், நாட்டு மக்கள் தலிபான்களைக்கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், காபூல் நகரில் மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் கோடாமன் என்னும் நகரில், தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் தலிபான்களை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தலிபான்களின் முன்னணி தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்கள். தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் இடைக்கால ஆட்சி அமைத்த பின்பு இவ்வாறான கூட்டம் நடப்பது இதுதான் முதல் தடவை என்று கூறப்பட்டுள்ளது.