ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது 21 1/2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது.
அதனை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்த போது கேட்பாரற்று இருந்த பையில் 21 1/2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அதை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.