இந்தியர்கள் ஒரு கதராடையாவது அணிந்து நெசவாளர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து கதரின் விற்பனை தொடங்கபட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் குத்துவிளக்கேற்றி தீபாவளி சிறப்புக் கதர் விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஏழை, எளிய நிற்போருக்கு, நெசவாளர்களுக்கு இடையராத வேலை வாய்ப்பை அளித்து நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி ஆற்றி வருகின்றன என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இம்மாவட்டத்தில் கதர் விற்பனை அங்காடி மூலமாக போர்வை, ரெடிமேட், துண்டு, வேட்டி, சட்டை, இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, சோப்பு வகைகள், தலையணை உறை, விரிப்புகள், பூஜை மற்றும் தேன் பொருட்கள், பருத்தி ரகங்கள், கதிர் பாலிஸ்டர் ரகங்கள், புடவை ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பட்டுப் புடவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
பின்னர் அரசு ஊழியர்களுக்கு கதர் பட்டு ரகங்களுக்கு 1௦ மாத சுலப தவணையில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு இணங்க கதராடையை அணிந்து மகிழ்ச்சியுடன் விழாக்கள் மற்றும் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் கதர் விற்பனைக்கு இலக்கு 82 லட்சத்து 11 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பேராதரவு தருமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.