உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்து வந்த 63 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழரசு என்பவர் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் 63 ஆயிரம் ரூபாயை எடுத்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும் படையினர் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.