உரிய ஆவணம் இன்றி 1,00,000 ரூபாய் எடுத்து வந்ததை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எறையூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் ஆல்பர்ட் வில்லியம் என்பவர் எந்த வித உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ஒரு லட்சம் ரூபாயை அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர்.