Categories
Uncategorized

ஏராளமான தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக் கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமானது 900 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்த முகாமில் 70000 பேர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் 100 சதவிகிதத்தை எட்டுவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முகாமை கண்காணிக்க நியமிக்கப்பட்ட 6 மண்டல அதிகாரிகள் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் என பல அதிகாரிகளுடன் உடன் இருந்துள்ளனர். மேலும் இந்த முகாமில் பொதுமக்களுகென கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |