Categories
மாநில செய்திகள்

கோவில் காணிக்கை நகைகள்…. இதைத்தான் செய்யப் போறோம் – அறநிலை துறை அமைச்சர்

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரும் நகைகளை உருக்க உள்ளோம் என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணிக்கையாக வந்த தங்க நகைகளை இறைவனுக்கே பயன்படுத்த திட்டம் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களில் கடந்த 10 ஆண்டு காலத்தில் காணிக்கையாக வந்த நகைகளில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ள நகைகளை கணக்கிட உள்ளது.

அதில் கோயில்களுக்கு தேவைப்படாத நகைகள், சிறுசிறு நகைகள் மற்றும் தெய்வ வழிபாட்டுக்கு பயன்படுத்தபடாத நகைகள் ஆகியவற்றை மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு கொண்டு சென்று  உருக்க உள்ளோம்.அதனை உருக்கி தங்க கட்டிகளாக தங்க வைப்பு நிதியில் வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை திருக்கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் மன்னர்கள் ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்கள் ஆகியோர் கோயிலுக்கு அளித்த நகைகளை இதற்கு எடுக்கப் போவதில்லை.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டு இத்திட்டம் நடைமுறையில் இருந்தது கடந்த 10 ஆண்டு காலமாக தான் உருக்கும் பணி நடைபெறவில்லை. இத்திட்டத்திற்காக கோவில்களை சென்னை,மதுரை மற்றும் திருச்சி என மூன்று மண்டலங்களாக பிரித்து கண்காணிப்பதற்காக நீதிபதிகளையே  நியமித்துள்ளோம். மேலும்  திருப்பதியிலும் இதே திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |