இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உலக்குடி கிராமத்தில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அஜய் என்ற 15 வயது சிறுவனும் வசித்து வந்துள்ளான். கடந்த அக்டோபர் 1 – ஆம் தேதியன்று பனைக்குடி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சுரேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சுரேஷின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சுரேஷ் அஜய் மற்றும் கண்ணன் மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் அஜய் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.