அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மாபியா படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பார்டர், பாக்சர், சினம், அக்னி சிறகுகள், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் வா டீல் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தின சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் கார்த்திகா நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வம்சி கிருஷ்ணா, சதீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். JSK பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வா டீல் படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.