குஷ்பூ மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/CUWp5skPTFv/?utm_source=ig_embed&ig_rid=8a47abb1-a841-46d9-a1fb-c65b49703751
மேலும் குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.