கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள ஒண்டிக்கடை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் ஒன்று இருந்து வருகிறது. இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் காலையில் கோவில் பூட்டு உடைந்திருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலறிந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து கொவிழிலில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.