Categories
அரசியல்

35ரூபாய் குறையும் பெட்ரோல் ? நான் சொன்னதை முழுமையா பாத்தீங்களா ? அண்ணாமலை கேள்வி ..!!

திமுக அரசு பெட்ரோல் விலையை வைத்து செய்யக்கூடிய நாடகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

காமராஜர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்திய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பா.ஜ.க தயார் என சொன்னது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  நான் சொன்னதை முழுவதுமாக நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. சன் நியூஸ் நிருபர் அங்கு இருந்தார். அவர் கூட ஒரு நண்பர் பேசிக்கொண்டே என் கிட்ட வந்து கேட்டார்.

இந்த மாதிரி பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு…. அதற்கு நான் ஒரே பதில் தான் சொன்னேன். ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருகிறோம் என்று 2016ல் தர்மேந்திர பிரதான் அவர்கள் பெட்ரோலியத் துறை அமைச்சராக நாங்க அப்பவே சொல்லிட்டோம், மிக தயாராக இருக்கின்றோம்.

2017இல்  ஜிஎஸ்டி சட்டம் வந்த பொழுது ஐந்து வருடகாலம் 2022 ஜூன் 30-ஆம் தேதி வரை மாநிலத்திற்கு இழப்பீடு கொடுக்கும் பொழுது தெளிவா சொன்னோம்…. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து பொருள்களும் ஜிஎஸ்டிக்குள் வர வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு இருக்கிறது என்று….. ஏனென்றால் ஒரே நாடு 3 ஸ்லப் வரி என்று சொல்லி இருந்தோம்…

அப்போது பெட்ரோலிய பொருட்களுக்கு கிடைத்தது விதிவிலக்கு தான் ஜிஎஸ்டியில் இருந்து வெளியே இருக்கிறது என்று சொல்லவில்லை. அதைத்தான் நேற்று நான் குறிப்பிட்டிருந்தேன் நாங்கள் தயாராக இருக்கும் பொழுது மாநில அரசு எதிர்ப்பது எதற்க்காக ? ஜிஎஸ்டிக்குள். கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புகை கொடுக்கவேண்டும். கொண்டு வரும்போது 28சதவீதம் வரியில் வரும் போது நிச்சயமாக பெட்ரோல் விலை குறையும், அதை விட்டுவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு பெட்ரோல் விலையை வைத்து செய்யக்கூடிய நாடகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

Categories

Tech |