துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும்.
தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாகக் கையாண்டு வெற்றிப் பெறுவீர்கள்.
அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மனதிலிருந்த கவலைகள் விலகிச்செல்லும். வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களும் வெற்றியைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.