100 நாட்கள் வேலை திட்டம் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.
100 நாட்கள் வேலை திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகின்றது என விமர்சனம் செய்த சீமான், வறுமையை போக்கவேண்டும் என்றால் பசியை போக்க வேண்டும் என்றால் வேளாண்மை செய்ய வேண்டும்.100 ரூபாய் நீங்கள் கொடுக்குறீங்க அரிசி எங்கிருந்து வரும் ? பருப்பு எங்கிருந்து வரும் ? வெங்காயம், தக்காளி எங்கிருந்து வரும் ? கத்தரிக்காய் எங்கிருந்து வரும் ? வெண்டைக்காய் எங்கிருந்து வரும் ? சோறு எங்கிருந்து வரும் ? வறுமையை போக்க வேண்டும் என்றால் 100ரூபாயை பிச்சி சாப்பிட்டு படுத்துறலாமா ? என தெரிவித்தார்.
சீமானின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன், அவர் விமர்சனம் செய்தார் என்பதை விட அவர் விமர்சனம் எதைப்பற்றி செய்யாமல் இருக்கிறார் என்று சொன்னீர்களே ஆனால் அது ஏற்புடையதாக இருக்கும். காரணம் எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக அவர் இருக்கிறார். கிராமப்பகுதி மக்களுடைய பொருளாதார நடமாட்டம், பண நடமாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றிய அரசு மூலமாக…
குறிப்பாக அன்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராகவும், நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் பா. சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக இருந்து கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் தான். பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அல்ல இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.