மன்னிப்பு கடிதம் கொடுப்பதற்காக தான் மத்திய நிதி அமைச்சரை தமிழக நிதி அமைச்சர் சந்தித்து இருப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு தமிழக நிதி அமைச்சர் செல்லாதது குறித்த விமர்சனங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு மாநிலத்தினுடைய நிதியமைச்சர் மத்திய நிதி அமைச்சரை பார்ப்பது என்பது ஒரு நல்ல விஷயம். போன ஜிஎஸ்டி கூட்டத்திற்கு போகவில்லை. அதற்கு பல்வேறு விவகாரங்கள்… வளைகாப்பிற்கு போனார் என்றார், அது முக்கியம் என்கிறார்கள்.
அதேபோல இன்னொன்றும் சொல்கிறார்கள். தனி விமானம் வேணும் என்று சொல்கிறார்கள் என்கிறார்கள், அதற்க்கு ஸ்டாலின் மறுத்தாரா ? இல்லையா என தெரியாது.நாங்களும் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்றோம். இதே போல போயிங் கேட்கல, ஜெட் கேட்கல, எதுவும் கேட்கவில்லை, தனி விமானமும் கேட்கவில்லை, எல்லோரும் பயணிகள் விமானத்தில் தான் போனோம்.
அப்படி ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு போகும் போது, 38 பொருட்களுக்கான வியாபாரிகள், வணிகர்கள் எல்லாமே எங்களுடன் வந்து ஆலோசித்து, ஜிஎஸ்டி கூட்டத்தில் கூறி 38 பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை குறைத்தோம்.28% இருந்ததை 18%, 18% இருந்ததை 12#, 12# இருந்தது எல்லாம் இன்றைக்கு 5% ஆச்சு. அதே மாதிரி ஏகப்பட்ட அளவிற்கு என்னால் முடிந்ததை வலியுறுத்தினோம், ட்விட்டரிலும் பட்டியல் போட்டு உள்ளேன்.
நான் ஜிஎஸ்டி கவுன்சில் இருக்கும் போது அம்மா அரசு சார்பில் என்னென்ன வலியுறுத்தினோம் என்று சொல்ல முடியும். எட்டுக்கு மேற்பட்ட சேவைகளுக்கான வரி குறைத்துள்ளோம், அதேபோல் எளிமைபடுத்தியுள்ளோம். எந்த சுமையையும் இல்லாத அளவிற்கு எளிமைப்படுத்தி உள்ளோம். இப்படி எல்லாம் ஜிஎஸ்டி மீட்டிங் போனோம். ஜிஎஸ்டி மீட்டிங் போகாம இப்போ மத்திய நிதியமைச்சர் சந்தித்திருக்கிறார் என்றால்….. எனக்கு பள்ளியில் நாங்க லீவ் லெட்டர் எழுதவோம்…. அதே மாதிரி ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்க தான் மத்திய நிதி அமைச்சரை சந்தித்துள்ளார்.
அவரே கம்ப்யூட்டர் அடிப்பாராம், அவரே பிரிண்ட் எடுப்பாராம், அவரே எடுத்துட்டு போய் கொடுப்பாராம். அந்த லெட்டரில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால்…. ஒரே விஷயம் நான் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் என்னால் ஜி.எஸ்.டி மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை, என்னை மன்னிக்கவும் என்ற கடிதத்தை தான் கொடுக்க தான் போயிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.