Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. திரண்டு வந்த பக்தர்கள்…. போலீஸ் மறுப்பு….!!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு கோவிலில் இருக்கும் ஆற்று கரையில் பக்தர்களை நேத்திக்கடன் செய்ய விடாமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள திருவந்திபுரம் பகுதியில் பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்ற நிலையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பக்தர்கள் சிலர் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதினால் தேவநாத சுவாமி கோவிலில் காலையில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றதால் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். அவர்களை கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கோவிலின் பின்புறத்தில் இருக்கும் ஆற்றில் பக்தர்கள் மொட்டை அடித்து தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தியுள்ளனர். மேலும் அங்கு சென்ற காவல்துறையினர் ஆற்றில் நேர்த்திகடன் செலுத்துவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |