கவனக்குறைவாக இருந்த ஏட்டு ஒருவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த பெட்டி கடையில் சோதனை நடத்திய போது புகையிலை புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் திடீரென காணாமல் போய்விட்டது.
இது குறித்து காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன் தீவிர விசாரணை நடத்தியதோடு, பணியின் போது கண்காணிப்பு பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட ஏட்டு ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரி அரவிந்தன் திட்டக்குடி காவல்நிலையத்திற்கும் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆவினங்குடிக்கும் பகுதிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.