தமிழகத்தில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவரான ஆர். எஸ். ஸ்ரீதர் என்பவர் திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவரிடம் டாஸ்மார்க் ஏலம் எடுத்து தருவதாக கூறி ரூ.3,00,000 பணத்தை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் எஸ்.பி சுகுணாசிங்கிட புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஏலத்துக்கு எடுத்து தருவதாக கூறி தன்னிடம் ரூ.3,00,000 திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட தலைவரான ஸ்ரீதர் கேட்டார்.
அதன்படி கடந்த ஜூலை 1ஆம் தேதி ஸ்ரீதரின் உதவியாளர் செந்தில் என்பவர் தனது வீட்டில் வந்து வாங்கிச் சென்றார். ஆனால் அவர் டாஸ்மாக் ஏலத்தை எடுத்து கொடுக்கவில்லை. இதையடுத்து தனது பணத்தை 30 ஆம் தேதிக்குள் திருப்பித்தர வேண்டும் என்று கேட்டதற்கு பணத்தை திருப்பித் தர முடியாது என்று அவர் ஆபாசமாகவும் மற்றும் அவதூறாகவும் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து திமுக வட்டச் செயலாளர் மற்றும் நகர செயலாளர் போன்ற கட்சி நிர்வாகிகள் பலரிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்காததால் அதன்பிறகு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் கட்சித் தலைமையே தலையிட்டு தனக்கு ஒரு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் திமுகவினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.