Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் பணிகள்…. 134 அலுவலர்கள் தேர்வு…. பார்வையாளர் தகவல்….!!

வாக்குப்பதிவை கண்காணிப்பதற்கு 134 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பார்வையாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு பார்வையாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட கலெக்டரும் மற்றும் தேர்தல் அலுவலரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் பார்வையாளர் விவேகானந்தன் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் தேர்தல் விதிமுறைகள் படி வாக்குபதிவு நடைபெறுவதை கண்காணித்திட தேசியமயமாக்கப்பட்ட எல்.ஐ.சி, தபால் துறை மற்றும் வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் உள்பட 134 பேரை நுண்பார்வையாளர்களாக நியமனம் செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்தும், தேர்தல் பார்வையாளருக்கு அளிக்க வேண்டிய அறிக்கைகள் குறித்தும், வாக்குப் பெட்டிகளை தேர்தலுக்கு தயார்படுத்துதல் குறித்தும் ஆலோசனை மற்றும் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் 134 நுண்பார்வையாளர்களும் வாக்குப்பதிவு நாள் அன்று சிறப்பான பணியினை மேற்கொள்ள வேண்டும் என பார்வையாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |