காமாட்சி அம்மன் விளக்குகளை மினி லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 200 காமாட்சி அம்மன் விளக்குகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் இதனை எடுத்து வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் காமாட்சி அம்மன் விளக்குகளை கொண்டு வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 200 காமாட்சி அம்மன் விளக்குகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 200 காமாட்சி அம்மன் விளக்குகளை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்டதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.