Categories
மாநில செய்திகள்

வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள்…. ஊதியம் கொடுக்க வேண்டாமே…. வேண்டுகோள் வைத்த மாநில தகவல் ஆணையம்….!!

தமிழகத்தில் லஞ்ச ஊழல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலகட்டத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கானது மாநில தகவல் ஆணையர் எஸ். முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முக்கியமான உத்தரவை கூறியுள்ளார். அதில் லஞ்ச வழக்குகள் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் காலகட்டத்தில் அவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு 50% சம்பளம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை சம்பளத்தில் 75% ,ஆறு மாதம் கழிந்த பின்பு முழு சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதனையடுத்து துறைரீதியான விசாரணையிலும் காலதாமதம் ஏற்படுவதால் நீதிமன்றம் மற்றும் துறைரீதியான விசாரணைக்கும் அரசுதான் செலவு செய்துவருகின்றது. அதனால் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் சுமையாக மாறிவிடுகிறது. எனவே பிழைப்பூதியத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு மாநில தகவல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |