Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 30 நிமிடத்தில்….. ரிக் இயந்திரம்….. காத்திருக்கும் தமிழகம் ….!!

குழந்தை சுர்ஜித்தை மீட்க ONGC_யின் ரிக் இயந்திரம் விரைவாக வந்து கொண்டு இருக்கின்றது.

குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்டு மனப்பாறையை நோக்கி விரைந்து கொண்டு இருக்கின்றது. வழி நெடுகிலும் உள்ள சாலை , மின்சாரம் போன்றவற்றை சரி செய்யப்பட்டது.

31 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 30 நிமிடத்தில் ரிக் இயந்திரம் நாடுகட்டுப்பட்டிக்கு வந்து விடும் என்று சொல்லப்படுகின்றது. 96 டன் எடைகொண்ட ரிக் இயந்திரம் 100 அடி பள்ளம் தோண்டி எப்படியும் குழந்தை சுஜித்தை மீட்டு விடும் என்று அந்த ஊர் மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |