திருமாவளவன் ஸ்டாலினை கண்டு பம்முகின்றார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட நிலைமை என்று பாருங்கள். திமுக கூட்டணியில் இருக்கின்ற தோழமை கட்சியே அவர்கள் மாவட்டங்களில் அவருடைய கட்சி கொடியை ஏற்ற கூடிய நிலை இல்லை என்று சொன்னால் அது தோழமை கட்சியில் இருக்கின்றவர்களுக்கு என்ன நிலைமை என்பதை பார்க்க வேண்டும்.
இந்தியாவிலே தமிழ்நாடும் இருக்கின்றது,இது ஒரு சுதந்திர நாடு, ஜனநாயக நாடு அப்படிப்பட்ட நிலையில் ஒரு கொடி ஏற்றுகின்ற அடிப்படை உரிமை கூட திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் மறுக்கிறது என்று சொன்னால் இதற்கு என்னுடைய அருமை நண்பர் ஆக இருக்கக்கூடிய திருமாவளவன் அவர்கள் குற்றம் சொல்வது, ஒரு தோழமையில் இருந்து கொண்டு ஒரு முதலமைச்சரே அனுமதித்தால் மட்டுமே இந்த கொடியேற்றுகின்ற நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அவரை விமர்சனம் செய்து விட்டு பம்முகிறார்.
காவல்துறையினரை குற்றம் சொல்கிறார். காவல்துறையில் கருப்பு ஆடுகள் இருக்கிறதாம் அவர்கள் செய்கின்ற வேலை அது. எப்படிப்பட்ட நிலை என்று பாருங்கள். திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்து எதற்கு பம்மனும், எதற்கு பயப்பட வேண்டும் எனக்கு வியப்பாக இருக்கிறது. வீரம் சிறந்த திருமாவளவன் உடைய வீரம் எங்கே போச்சு ? அதை தான் இன்றைக்கு தேடிக்கொண்டிருக்கிறோம்.