வடகொரியா ஏவுகணை சோதனை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடும் எச்சரிக்கையை முன்வைத்துள்ளது.
வடகொரியா நாடு ஏவுகணை சோதனையை 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி உலக நாடுகளே அதிர்ந்து போகும் வகையில் வடகொரியா நான்கு ஏவுகணைகளை ஒரே மாதத்தில் சோதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்று வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக நடத்தப்பட்டுள்ளது. அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடை விதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை செயல்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்த விவகாரம் தொடர்பில் கடும் எச்சரிக்கையினை முன்வைத்துள்ளது.
மேலும் “அமெரிக்கா மற்றும் அதனுடைய கூட்டாளிகள் ஆயுத சோதனைகளில் இதேபோல் சமமாக பிரச்சினை எடுக்காததன் மூலம் இரட்டை கையாளும் தரநிலையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது” என்ற வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜோ சோல் சூ கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதற்கான விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.