பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி சீனிவாஸ் டுவிட் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் நேற்று உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்..
இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்.. அப்போது முதல்வரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் சென்றபோது, அவரையும் விவசாயிகள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டியுள்ளனர்.
ஆனால் மத்திய அமைச்சர் மகன் கூட்டத்தில் புகுந்து இடித்து தள்ளி காரை எடுத்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கார் மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் தெரிவித்திருந்தது.. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகனின் கார் உட்பட 3 காரை அடித்து உடைத்து நொறுக்கி தீ வைத்தனர்.
இதனால் திக்குனியா கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டு கலவரமாக மாறியது.. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது.. இந்த நிலையில் லக்கீம்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையில் விவசாயிகள் 4 பேர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தினர் தரப்பில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவும், அவரது மகனை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய இணை அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்றனர்.. இதனையடுத்து அமைச்சர் மகன் ஆஷிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தில் லக்னோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் பதற்றம் என்பது நீடித்து வருகிறது. இதன் காரணமாக லக்கீம்பூர் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விவசாயிகள் சார்பில் இந்த சம்பவம் என்பது திட்டமிட்டு நடைபெற்றதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்..
ஆனால் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டிய போதும் கல்வீசும்போது போதுதான் இந்த கார் என்பது கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகவும் அதில் தான் விவசாயிகள் இறந்ததாகவும், சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
முதல் கட்டமாக அந்த பகுதியில் வீடியோ காட்சிகளை ஆதாரங்களை வைத்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் இன்று தன்னுடைய அரசு முறை பயணங்களை ரத்து செய்திருக்கிறார். அதே நேரத்தில் அவர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இன்றைய தினம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. லக்கீம்பூரில் பலியான விவசாயிகள் குடும்பத்தை பார்க்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.. பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள்.
जब 'इतिहास' लिखा जाएगा तो ये भी याद किया जाएगा कि जब #लखीमपुर_किसान_नरसंहार हुआ तो कौन सड़कों पर उनकी लड़ाई लड़ रहा था,
और कौन अपने घरों में आराम फरमाते हुए अन्नदाताओं की मौत पर जश्न मना रहा था… pic.twitter.com/ikjsjolanz
— Srinivas BV (@srinivasiyc) October 4, 2021
இன்றைய தினம் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் விதமாக உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.. 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சில விவசாயிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள் கடுமையான தங்களுடைய கண்டனம் வாயிலாக பதிவு செய்துள்ளனர்..
This Day – That Year.
Indira returns ✊ pic.twitter.com/dPVlUsQvvN— Srinivas BV (@srinivasiyc) October 4, 2021