Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கலவரம்…. பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

உ.பியில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பல பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.. இந்த நிலையில் நேற்று உ.பி லக்கீம்பூர் கெர்ரி பகுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா கலந்து கொள்ள இருந்தார்..

இதனையறிந்த விவசாய சங்கத்தினர் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யகோரி அவருக்கு கருப்புகொடி காட்ட திரண்டனர்..  அப்போது முதல்வரை வரவேற்க அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் கார் சென்றபோது, அவரையும் விவசாயிகள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டியுள்ளனர்.

ஆனால் மத்திய அமைச்சர் மகன் கூட்டத்தில் புகுந்து இடித்து தள்ளி காரை எடுத்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. கார் மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் தெரிவித்திருந்தது.. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மத்திய அமைச்சர் மகனின் கார் உட்பட 3 காரை அடித்து உடைத்து நொறுக்கி தீ வைத்தனர்.

இதனால் திக்குனியா கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டு கலவரமாக மாறியது.. அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது.. இந்த நிலையில் நேற்று இரவு லக்கீம்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையில் விவசாயிகள் 4 பேர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய மோதலில் காயமடைந்த பத்திரிக்கையாளர் ராமன் காஸ்யப்  என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.. இதனால் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. லக்கிம்பூர் பகுதியில் இந்த வன்முறைச் சம்பவத்தில் நிறைய பேர் படுகாயமடைந்து இருப்பதாக முதல்கட்ட தகவல் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தினர் மத்திய இணை அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்றனர்.. இதனையடுத்து அமைச்சர் மகன் ஆஷிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உ.பியில் பதற்றம் நீடித்து வருகிறது.

Categories

Tech |