ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர் உட்பட 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்னும் நகரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து, மர்ம நபர்கள் திடீரென்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் விரிவுரையாளரும் பிரபல பத்திரிகையாளருமான சையது மரூப் சதாத் மற்றும் மூவர் உயிரிழந்தனர்.
இதில் இருவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் பத்திரிகையாளரின் மகனுக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.