Categories
அரசியல்

எஸ்.பி வேலுமணி ராசியானவர்…! அறிகுறி உங்க முகத்தில் தெரியுது…. எனர்ஜிட்டிக்க்காக பேசிய  ஓபிஎஸ்…!!

உங்கள் முகத்தில் தெரியும் வெற்றி புன்னகை உள்ளாட்சி தேர்தலில்நாம் வெற்றி பெறுவோம் என்பதை உணர்த்துகின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடைபெற இருக்கின்ற  ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலையில் இருந்து நான் பல்வேறு  கழகத்தினுடைய  நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் சந்திக்கின்ற பொழுது… அவர்கள் சிறப்பாக இந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று  என்னிடம் உறுதியைத் தந்த நேரத்தில்… நான் இந்த  கூட்டத்திலே  கலந்துகொண்டு உங்களை எல்லாம் காணுகின்ற நேரத்தில் உங்களுடைய திருமுகங்களில் ஒரு வெற்றிப்புன்னகை  இருப்பதை நான் கண்கூடாக காணுகின்ற ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

உறுதியாக நடைபெற இருக்கின்ற  ஒன்பது மாவட்டங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என்ற நிலையில் நீங்கள் வெற்றிப் புன்னகையோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்  என்பதை அறிந்து உங்களுக்கு நாங்கள் இந்த நல்ல நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.அருமை சகோதரர்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள். தேர்தலில் அவர் ராசியானவர். கோயம்பத்தூரில் பத்துக்கு பத்து வெற்றி பெற்று திமுகவுக்கு சவாலாக இருந்தார் .

இந்த ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அவரே முன்வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். உறுதியாக இதே மண்டபத்தில் தேர்தல் முடிந்த பிறகு வெற்றி  விழாக் கூட்டம் நடைபெறும் என்பதனை உங்களுடைய அனைவருடைய திருமுகங்களில் நான் காணுகின்ற ஒரு நல்ல வாய்ப்பு இன்றைக்கு எனக்கு கிடைத்திருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Categories

Tech |