Categories
அரசியல்

எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது – கெத்து காட்டிய ஓபிஎஸ் …!!

அதிமுகவை கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது அம்மா என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்ற கழகத்தை 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்க வீரவரலாற்றில் அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகாலம் தன்னுடைய வெற்றி நடையை நிறைவு செய்து,  50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நல்ல தருணத்தில் நாம் இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.

எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு  சோதனைகள். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை ஆரம்பித்த போது அவருக்கு ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் அவர் முறியடித்து, மூன்று முறை யாராலும் வெல்ல முடியாத முதலமைச்சராக….. 72இல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 77இல் ஆளும் கட்சி. முழுமையாக 5 ஆண்டு காலம்  ஆட்சியை  நீடிக்க விடாமல் 80 இல் ஆட்சி கலைக்கப்பட்டது.

நேர்மையான  ஆட்சி, நல்ல தலைமையில் புரட்சித்தலைவருடைய ஆட்சி, குறுக்கு வழியில் கருணாநிதியினுடைய பேச்சை கேட்டு மத்தியில் ஆளுகின்ற  ஆட்சி நம்முடைய புரட்சித் தலைவருடைய ஆட்சியை கவிழ்த்தார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று புரட்சித்தலைவர் மீண்டும் வெகுண்டெழுந்து 1980 ஆம் ஆண்டு மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 1984 மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் பிரச்சாரத்திற்கே வராமல் எங்களுடைய தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் வெற்றி வீரராக மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பத்தாண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை, நாடு போற்றுகின்ற நல்லாட்சியை,  நல்ல பல திட்டங்களை தந்த  முதலமைச்சராக வரலாற்றில் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்ற  திட்டங்களாக… தன்னிறைவு திட்டம், மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்கின்ற திட்டம், ஏழை குழந்தைகளின் பசியாற உணவு வழங்குகின்ற சத்துணவு திட்டம் இவை தந்த முதலமைச்சராக புரட்சித் தலைவர்  சிறப்பாக  ஆட்சி செய்தார்.

மாண்புமிகு புரட்சித்தலைவருடைய மறைவுக்கு பின்னால் மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம் இருந்தார். மாண்புமிகு அம்மா அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்  இந்த உலகத்தில் யாருக்கும் ஏற்பட்டிருக்காது . அவ்வளவு சோதனைகள்… எப்படியாவது கழகத்தை அழித்திட  வேண்டும் என்று திமுகவின் தலைவர் கருணாநிதி போட்ட சதி வேலைகளை எல்லாம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா உடைத்தார்.

மாண்புமிகு புரட்சி தலைவர் மறைகின்ற பொழுது 16லட்சம் உறுப்பினர்களை கொண்டஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் 30 ஆண்டு காலம் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம், தியாக வாழ்க்கையை மேற்கொண்டு, தவ வாழ்க்கையை மேற்கொண்டு  அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகத்தை மாபெரும் இயக்கமாக…. ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட தூய தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றி எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது அம்மா என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Categories

Tech |