Categories
Uncategorized அரசியல்

சின்னச் சின்ன பிரச்சினைகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் – ஓபிஎஸ் வேதனை

சின்னச் சின்ன பிரச்சினைகளால் நாம்  தேர்தலில்வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு புரட்சி தலைவர் மறைகின்ற பொழுது 16லட்சம் உறுப்பினர்களை கொண்டஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் 30 ஆண்டு காலம் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம், தியாக வாழ்க்கையை மேற்கொண்டு, தவ வாழ்க்கையை மேற்கொண்டு  அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகத்தை மாபெரும் இயக்கமாக….

ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட தூய தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றி எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது அம்மா. கழகத்தைக் கட்டிக் காத்து காவல்  தெய்வமாக சிறப்பாக தலைமை தங்கினார்கள் என்பதும், மாண்புமிகு அம்மா 16 ஆண்டுகள்  தமிழகத்துடைய முதலமைச்சராக ஒரு சிறப்பான ஆட்சி செய்தார்.

2011இல் அம்மா வர்கள்  முதலமைச்சராக பொறுப்பேற்று  நல்ல பல திட்டங்களை நாட்டு மக்கள் தந்த முதலமைச்சராக திகந்தார். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்த மக்களை  மேல்தட்டு மக்களுக்கு இணையாக வாழ்கின்ற ஒரு நிலையை…. பொருளாதார நிலை முதற்கொண்டு அனைத்து நிலையிலும் அவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என்று பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மாண்புமிகு அம்மா பொற்கால ஆட்சியில்  நிகழ்த்தி காட்டினார்கள்.

அதன் விளைவினால் தான் ஆண்ட கட்சி ஆளுகின்ற உரிமையை  32 ஆண்டுகளுக்கு பெற்ற முதலமைச்சராக மாண்புமிகு அம்மா அவர்கள்  2011இல் ஒரு மகத்தான வெற்றியை பெற்று தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். தலைவர் 10 ஆண்டு காலம், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 16 ஆண்டு காலம், அதற்கு பின்னால் நான்கு ஆண்டுகள் நம்முடைய முதலமைச்சர்  எடப்பாடி கே  பழனிசாமி அவர்கள் அம்மா செயல்முறைப் படுத்திய அனைத்து திட்டங்களையும் மக்கள் நலத்திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை அனைத்தையும் செயல்படுத்தி அடிபிறழாமல் நாம் ஆட்சி நடத்தி வருகிறோம்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஒரு தனிப்பட்ட இயக்கம்… கட்சி தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் கட்சி அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகம் தான் என்பதை  மக்களுடைய நல்லாதரவு பெற்று நிகழ்த்திக்காட்டி இருக்கின்றோம் இது என்பது தான் வரலாறு . சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சின்னச் சின்ன பிரச்சினைகளால் நாம் அந்த வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

Categories

Tech |