இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை செய்யும் போது ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்துள்ளது.. சரியாக ஒதுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்று விதிகள் மீறப்பட கூடாது என்றும், அதேசமயம் வார்டு ஒதுக்கீடு செய்யப்படும் போது சரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்…
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, .. வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குளறுபடிகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அதுவரை வேட்பு மனுக்கள் பெறுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
புதுச்சேரி அரசு தரப்பில், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 21 முதல் நடக்க உள்ள தேர்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணையை அக்டோபர் 7க்கு ஒத்தி வைக்க புதுச்சேரி அரசு கோரி நிலையில், நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.