Categories
தேசிய செய்திகள்

Breaking: எதற்கு போராட்டம் ? – விவசாயிகளுக்கு நீதிமன்றம் கேள்வி ..!!

எதற்க்காக போராட்டம் நடைபெறுகின்றது என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் சுற்றுவட்டார பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். குறிப்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதால் தாங்கள் டெல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை,
குறிப்பாக மார்க்கெட்டிங் உள்ளிட்ட தொழில்களில் இருக்கின்றவர்கள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை சென்று வருவதற்கும் கூட கடும் சிரமம் இருக்கின்றது.

எனவே இந்த விவசாயிகளின்  சாலை மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய நபர்கள் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீன்கர்  தலைமையில் விசாரணையாக  நடைபெற்று வருகின்றது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, இது சம்பந்தமாக விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சாலை மறியலும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி காவல் துறையை தங்களைத் தடுத்து நிறுத்துவதால் மட்டுமே நாங்கள் சாலையில் அமர்ந்து இருக்கின்றோம் என்றும் காவல் துறையினர் விட்டு விட்டார்கள் என்றால் நாங்கள் சுலபமாக வெளியே சென்று விட்டோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

வழக்கின் விசாரணை வாதம் பிரதிவாதம் நடக்கும் போது மூன்று வேளாண் சட்டங்கள் உச்சநீதிமன்றத்தால் இடைக்கால நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த மூன்று  சட்டங்ளும் சட்டபூர்வமாக சரியானதுதான் என்பதை கண்டறியும் முறையை அமல்படுத்துவது, அதனை செய்ய வேண்டிய  உச்சநீதிமன்றத்தின் கடைமை. மத்திய அரசும் கூட மூன்று வேளாண் சட்டங்களை இப்போதைக்கு அமுல்படுத்தப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்கள.

எனவே அனைத்து தரப்பிலும் தெளிவாக இருக்க கூடிய சூழலில் விவசாயிகள் எதற்காக போராடுகிறீர்கள் ? எதற்காக சாலையில் அமர்ந்து சாலைமறியலில் உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள் ? நீங்கள் யாருக்கு எதிராக இதற்கு எதிராக போராடுகிறார்கள் ? என்று பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பி இருக்கிறார் .

Categories

Tech |