மூன்று வேளாண் சட்டங்களும் இடை காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எதற்காக போராடுகிறீர்கள் என்று விவசாயிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பு உள்ளனர்.
முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாதக்கணக்கில் இந்த போராட்டம் நடந்து வருகின்றது. அதேபோல நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் விவசாயிகள் உட்பட பலரும் உயிரிழந்தனர். இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எதற்காக போராடுகிறார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
உத்திரபிரதேச வன்முறையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பல இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதம் ஆகிறது. ஆனால் அதற்கும் தங்களது அமைதி வழிப் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறீர்கள். இதனை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது ? போன்ற பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள். வழக்கின் விசாரணையை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் நீதிபதிகள் கேட்டு இருக்கக் கூடிய கேள்வி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.