விசாரணையின் போது போலீஸ் அதிகாரியை கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொந்து முனியாண்டி, சிவலிங்கம் பெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் பஜார் அருகே சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அலவாகரைவாடி பகுதியில் வசிக்கும் ஜெய கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திபோது கார்த்திக் ஆத்திரமடைந்து அருகே இருந்த கல்லால் சப்-இன்ஸ்பெக்டர் பொந்து முனியாண்டியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அதிகாரியை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் ஜெய கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.