Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான சில நாட்களில்…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமான சில நாட்களில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடி காந்தி நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சரவணன் அரூரில் உள்ள தனியார் தங்க நகை கடையில் பணி செய்து வருகிறார். அதே நகைகடையில் அரூரை சேர்ந்த ரகமத்துல்லா மகள் ரஷிதா பேகம் என்பவரும் பணிபுரிந்து வந்தார். அப்போது சரவணன் மற்றும் ரஷிதா பேகம் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 30-ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இவர்களின் காதல் திருமணம் தொடர்பாக ரஷிதா பேகத்தின் அக்காள் ரோஷ்மாவுக்கும், அவரது கணவர் அமானுல்லாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷிதா பேகம் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அருகில் இருந்து விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஷிதா பேகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு திருமணமான சில நாட்களில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |