Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை கவனிக்கவில்லை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற கலெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டுப் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது சொந்த விவசாய நிலத்தில் கொய்யா மரங்களையும், கொய்யா செடிகளையும் பராமரிப்பு செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அருகில் இருந்த கொய்யா மரத்தில் மின்கம்பி உரசிக்கொண்டு இருந்ததில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சுந்தரமூர்த்தி அந்த கொய்யா மரத்தை தொட்ட போது கையில் ஈரபதம்  இருந்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |