காற்றுடன் கூடிய பலத்த மழையில் வாழைகள் முறிந்து நாசமானதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகிலுள்ள சொலவனூர், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த காற்றால் சொலவனூரில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 1,000 வாழை மரங்கள் முறிந்து நாசமானது.
இதேபோன்று பனையம்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடைய தோட்டத்திலும் சாகுபடி செய்யப்பட்ட 400 வாழைகள் முறிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.