Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாக்கு சேகரிக்க சென்ற அதிகாரிகள்…. தற்காலிக பணியிடை நீக்கம்…. கலெக்டரின் தகவல்….!!

தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற 2 அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து சோமநாயகன்பட்டி ஊராட்சியில் இயக்குனர்களாக பணிபுரிந்து வரும் கே. முருகன், சின்னகண்ணன் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை உரிய ஆதாரங்களுடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிக்க சென்ற இரண்டு இயக்குனர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |