Categories
உலக செய்திகள்

மருத்துவத்துறையில் இருவருக்கு…. நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு…. சுவீடனில் வெளியான தகவல்….!!

சுவீடன் நாட்டில் இன்று வெளியான அறிவிப்பில்  மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் பெரிதும் மதிக்கப்பட கூடிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மேலும் நோபல் பரிசினை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் பொருளாதாரம், மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் மிகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி சிறப்பிக்க படுகிறது. இதனால் நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் மிக பெரிய கனவாக திகழ்கிறது.

இந்த நிலையில் இன்று 2021 ஆம்  ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பினை சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இன்றிலிருந்து வெளியாகிறது. குறிப்பாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ துறையில் நோபல் பரிசினை டாக்டர்கள் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுட்டியன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளித்துள்ளனர்.

இந்த நோபல் பரிசானது மனிதர்களின் உடலை தொடாமலேயே வெப்பம், வலி, உடல் அழுத்தம் உள்ளிட்ட இதர விவரங்களை சென்சார் மூலம் அறிய கூடிய கருவியை கண்டுபிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |